புதன், 29 அக்டோபர், 2014

உதகமண்டலம் - சிற்றுலா001

உதகமண்டலம் - சிற்றுலா001

- தொட்டபேட்டா சிகரம்(Doddabetta)
- தாவரவியல் தோட்டம்(Botanical Garden)
- படகு இல்லம்(Boat House)
- எம் ஆர் சி (வெளிக் காட்சி)(M R C (outer view))
- பள்ளத்தாக்கு காட்சி(Valley View)
- குழிப் பந்து விளையாட்டுச் சங்கம்(Golf Club)
- தேயிலை தோட்டம்(Tea gardens)
- செம்மறி ஆட்டுக்குட்டிகளின் பாறை(Lambs Rock)
- தால்பின்சு மூக்கு(Dolphine’s nose)
- சிம்சு பூங்கா(Sim’s Park)

வியர்வை உடல் துர்நாற்றம் நீங்க - தமிழர் மருத்துவம்,

வியர்வை உடல் துர்நாற்றம் நீங்க:-

Ø  ஆவாரம் பூவை நிழலில் உலர வைத்து, அரைவை இயந்திரத்தில் இட்டு ன்றாக அரைத்து, அதனுடன் பயத்தம் பருப்பு மாவைச் சேர்த்துத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

உடல் பருமனாக - தமிழர் மருத்துவம்,

 உடல் பருமனாக...

Ø  வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி தரும்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பல்வலி குணமாக:- தமிழர் மருத்துவம்

 பல்வலி குணமாக:-


Ø  புதினா இலையை நன்றாகக் கழுவி நிழலில் உலர்த்தி எடுக்கவும். காய்ந்ததும் அதனுடன் உப்பு சேர்த்துப் பல் தேய்க்கவும். இப்படிச் செய்தால் பல்வலி, சொத்தை வராது. பல்லும் வெண்மையாக இருக்கும்.

நாள்பட்ட இருமல் நீங்க-தமிழர் மருத்துவம்,

நாள்பட்ட இருமல் நீங்க:-

Ø  ஒரு தேக்கரண்டி மிளகு, 3 தேக்கரண்டி திப்பிலி இரண்டையும் கொஞ்சம் நெய் விட்டு வறுத்து பொடிசெய்து  வைத்துக் கொள்ளவும் அத்துடன்  காய்ந்த திராட்சையைப் போட்டு இரண்டு சுற்று சுற்றியெடுத்து, சுண்ண்டைக்காய் அளவு காலை, மாலையும் சாப்பிடவும். அத்துடன் பாலும் சாப்பிட்டால் இருமல் நின்று விடும்.

சிறுநீர் எரிச்சல் நீங்க, நீர் சுருக்கு எரிச்சல் நீங்க-தமிழர் மருத்துவம்,

சிறுநீர் எரிச்சல் நீங்க, நீர் சுருக்கு எரிச்சல் நீங்க:-


Ø  தயிரை நன்றாகக்  கடைந்து நீர் மோராகச் செய்து, அதில் எலுமிச்சைசாறு 1 தேக்கரண்டி விட்டுக் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் நீங்கி குணம் கிடைக்கும்.

Ø  வெண்டை விதையை ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு குவளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும், பார்லி கஞ்சி போல வரும் . இதைக் குடித்தால் நீர் சுருக்கு சரியாகிவிடும்.

வேனல் கட்டி குணமாக- தமிழர் மருத்துவம்,

வேனல் கட்டி குணமாக:-


Ø  உடம்புக்கு போடும் வழலையை (சோப்பு) எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கலுப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்து கட்டி வந்த இடத்தில் போடவும். கட்டி பழுத்து உடைந்து விடும்.

அசீரணம் சரியாக (அ) சீரண சக்தி உண்டாக-தமிழர் மருத்துவம்,

அசீரணம் சரியாக () சீரண சக்தி உண்டாக:-


Ø  அகத்திக்கீரையில் சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கின்றன. மூளைக் கோளாறு சரியாகும். சீரண சக்தி உண்டாகும். உடலுக்கு நல்ல சக்தியைத் தரும்.

Ø  ஒரு குவளை தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடிக்க அசீரணம் சரியாகிவிடும்.

பித்த வெடிப்பு நீங்க-தமிழர் மருத்துவம்,

பித்த வெடிப்பு நீங்க:-


Ø  வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணெயில் வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

வயிற்று உப்புசம், பேதி தீர-தமிழர் மருத்துவம்,

வயிற்று உப்புசம், பேதி தீர:-

Ø  அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஆசுத்துமா, மூச்சு திணறல் குணமாக-தமிழர் மருத்துவம்,

ஆசுத்துமா, மூச்சு திணறல் குணமாக:-

Ø  முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

வயிறு தொடர்பான வலி நீங்க-தமிழர் மருத்துவம்,

வயிறு தொடர்பான வலி நீங்க
Ø  மிளகை எண்ணெயில் மிதமாக வறுத்து சீரகம், உப்பு  சேர்த்து தூள் செய்து சுடுசோற்றில் பிசைந்து இரவு சாப்பிட வேண்டும்.